image image image image
கடற் சிங்கக் காட்சி 2003 ம் ஆண்டு, வைகாசி மாதம் ஜப்பானிலிருந்து கொன்டுவரப்பட்ட சக்கு எனும் கடற்சிங்க குட்டியின் வருகையின் பின் கடற்சிங்க நிகழ்வானது. மிருககாட்சிசாலையில் பலரினதும் கருத்தை கவர்ந்ததொன்றாகும். விரைவில் தன்னை இப்புதிய சூழலிற்கு பழக்கப்படுத்திக் கொண்ட சக்குவை எமது பயிற்சியாளர் மூன்று மாதங்களில் பயிற்றுவித்தார்.
இலங்கை யானைகள் இலங்கை யானைகளை பற்றி குறுந்தகவல்களைக் கொண்டதாய்சிங்கள மொழியில் அமைந்துள்ளது. இந் நூலில் யானைகள் பற்றிய பொதுவான விபரமும் அவற்றின் நடத்தையும்  ஆசிய யானைகளின் சிறப்பியல்புகள் போன்ற விடயங்கள் அடங்கியுள்ளன. இலங்கை யானைகள் பற்றி அறிய விரும்புவோருற்கு இக் குறுநூல் பயனுள்ளது.
இலங்கைக்கேயுரிய (தனித்துவமான) மீனினங்கள் இந் நூலானது இலங்கையில் மட்டுமே காணப்படும் மீனினங்கள் அவற்றின் இயல்புகள் அவை எதிர் நோக்கும் நெருக்கடிகள் தனித்துவமான மீன்களின் காப்பு பற்றிய விபரங்களையும் மற்றும் அவற்றின் பலவர்ண புகைப்படங்களையும் உள்ளடக்கியுள்ளது. சிங்கள மொழியில் மட்டுமே கிடைக்கப்பெறுகின்றன.
தாவரப் பூங்கா தேசிய மிருககாட்சிசாலையானது அதன் அடர்ந்து வளர்ந்துள்ள பெரிய மரங்களிற்கும் நன்கு வடிவமைக்கப்பட்ட சாய்வான தரையமைப்பிற்கு பெயர் போனது. இயற்கையான உறைவிடங்களை வழங்குவதற்காய் அரிதான பலமரங்களையும் பயிர்களையும் கொண்டதாய் அமைக்கப்பட்டுள்ளது. இவ் வனப் பகுதிகளில் அரிய மூலிகைச் செடிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

செய்திகள்

வரைப்படம்

மாதாந்த வீடியோ