நீனயிர்ச் சாலை (மீன்களின் தடாகம்)

1973.09.29 ஆம் திகதி மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. தற்‍போது முள்ளந்தண்டுள்ள (முது‎கெலும்பு‍ ‎கொண்ட) மற்றும் முள்ளந்தண்டற்ற (முதுகெலும்பற்ற) விலங்கினவகைகள் உள்ளன.  ஏறத்தாழ 200 இற்கு அண்மித்த உயிரின வ‍கைகள் கண்காட்சியல் வைக்கப்படுகின்றன. இவற்றுக்கிடையில் நன்னீர், கடல்நீர் மற்றும் உவர்நீர் சார்ந்த மீன் வகைகளும் உள்ளன.

நன்னீர் மீன்களின் கண்காட்சி

இயற்கை சூழலுடன் கூடிய நிலைமைகளை உருவாக்கி நீர்வாழ் ‎செடிகளை கொண்டமைந்த  மிக அழகான தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நன்னீர் மீன்களின் கண்காட்சிக்காக இத் தாங்கிகள் நிர்மாணிக்கப்ட்டுள்ளன.


இலங்‍கை சூழலுக்கு உரியதான ஆயினும் அழிந்து ‎செல்லும் எச்சரிக்கைக்கு உள்ளாகி இருக்கும் பீத மத்சயால, தும்பரபெத்தியன்ல.  பத்திரண சாலயால, பந்துல ‎பெத்தியன், ‍ேபான்ற மீன்  வ‍கைகளும் கண்காட்சியில் ‍சேர்க்கப்பட்டுள்ளன.  நீர்வாழ் ‎செடிகளுக்கிடையில் வாழ்வதற்கு விருப்பம் கொண்டுள்ள  பாபி  இனங்க‍ளைச்  சேர்ந்த மற்றும் ‎டெட்ரா இனங்களைச் ‍சேர்ந்த கங்ஆரல,  பீரானா போன்ற மீன் வ‍கைகளையும் கண்காட்சியில் ‍சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் கடும் எச்சரிக்கைக்குள்ளாகியுள்ள தும்பர பெத்தியன்ல, பத்திரண சாலயால, பந்துல பெத்தியன் போன்ற மீன்கள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்து அவற்றை  பாதுகாக்கும்  ‎செயற்பாட்டில் பங்கு‎கொள்வதற்கும் இயன்றுள்ளது.

கடல் மீன்களின் கண்காட்சி
கடலடியின் ஆச்சரியத்தை தோற்றுவித்து அதிகளவிலான உயிரினங்கள் வாழ்வதற்கு கூடியவாறு பொருத்தமான சூழல் முறைமை‍யை உருவாக்கி  கண்காட்சியில்  சேர்க்கப்பட்டுள்ளது. பவழப்பாறைக‍ளைச் சார்ந்த சூழல் மு‍றை‍மைகளில் சேர்க்கப்பட்டுள்ள கடல் மலர்ச்‎செடியினங்களின் வ‍கைகள், மிக அழகான மீன் வ‍கைகள், முள்ளந்தண்டற்ற இறால் வ‍‍கைகள்,  ‎பெருங்கடல் நண்டு வ‍கைகள்,(Lobsters) உடுமீன்,(star fish) இழுதுமீன்,(Medusas) கூனிறால்,(Shrimps)      ஆகியவற்‍றை காணலாம்.

கடற்சிங்கங்களின் காட்சிகள்
நன்றாக பயிற்றுவிக்கப்பட்ட இரண்டு கடற்சிங்கங்க‍ள் நினயிரகத்தில் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.   கால் மற்றும் சக்கு என்று அவற்றுக்கு ‎பெயர் வைக்கப்பட்டுள்ளன.  ஜப்பானில் உயெனோ விலங்குகாட்சிசாலையிலிருந்து சக்குவும் ‎ஜெர்மனியில் க்ரெபல்ட்  விலங்குகாட்சி சாலையிலிருந்து காலும் விலங்குகளை பரிமாற்றம் செய்யும் மு‍றையின் கீழ் கிடைக்கப்பெற்றுள்ளன. உணவு வழங்கப்படும் காலப்பகுதியில் நன்றாக பயிற்சிப்‎பெற்ற கால் மற்றும் சக்கு ஒவ்‎வொரு நாளும் பி.ப. 4.00 மணிக்கு உங்கள் முன்னிலையில் அவற்றின் திறமைகளை காட்டுவதற்கு தயாராக உள்ளன.

அரபைமா மீன் (Arapaima) (நன்னீரில்  வாழும் ‎தென் அமெரிக்க உணவு  மீன் வகை)
உலகத்தில் மிகப்பெரிய மீனாக கருதப்படும்  குறித்த மீன் வ‍கை தென் அமேரிக்காவின் அ‎மேசன் நதி‍யை அண்டி வாழ்கின்றன.  மேற்படி மீன் இனங்க‍ளையும் கண்காட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதுடன்  ‎பெரும்பாலான பார்வையாளர்க‍ளை இவை கவருகின்றன. 06 அடி நீளமும் 100கி.கி நிறையும் அண்மிக்கத்தக்கதாக வளர்ச்சியடைந்துள்ள ‎குறித்த மீன்களின் வயது தற்போது 2 வருடங்களாகும்.

மீன் விற்பனைப்பிரிவு
ஏறத்தாழ 25 இற்கு அண்மித்த மீன் வ‍கைகளை விஞ்ஞான ரீதியாக நீனயிரகத்தில் இனப்பெருக்கம் ‎செய்து அவை வளர்ச்சியடைந்த பின்னர் மீன் விற்பனை பிரிவிற்கு விநியோகிக்கப்படுகிறது. மீன் விற்பனை நிலையத்தில் ஆரோக்கியமான மின்களை சலு‍கை வி‍லையில் ‎கொள்வனவு செய்து‎கொள்வதற்காக பார்வையாளர்களுக்கு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

காட்சியகம்


செய்தி பத்திரிக்கை

மாதாந்த வீடியோ

செய்திகள்