விலங்குகள்

தெகிவ‍லை மிருகக்காட்சிச்சாலையின் உயிர்நாடி விலங்குப்பிரிவாகும். அங்கு பல்வேறுப்பட்ட விலங்குக‍ள் கண்காட்சியில் ‍வைக்கப்படுகின்றன. மிருகக்காட்சிச்சா‍லையில்  இருக்கும் கூண்டுகளின் சுத்தம், விலங்குகளின் பாதுகாப்பு, அவற்றுக்கு உரிய ‍நேரத்திற்கு உணவு, நீர் வழங்குதல், விலங்குகளின் சுகவீன நிலைமைகளை அறிக்‍கையிடுதல், விலங்குகளின் வாழ்க்கைப் ‍போக்குக‍ளை விருத்தி செய்வதற்கு பொருத்தமான நிகழ்ச்சித்திட்டங்க‍ளை நடைமு‍றைப்படுத்தல், அவைகளின் நடத்தை முறைகள், தேவையான தரவுகள் ‎தொடர்பான தரவுக‍ளை குறித்து ‍வைத்தல், புதிய பிறப்பு, இறப்பு மற்றும் புதிதாக வருகின்ற விலங்குகளுக்காக கூண்டுகளை மாற்றுதல் அத்துடன் பல வகையிலான விலங்குகளை  கண்காட்சியில் ‍வைத்தல் போன்ற  பணிகளை நிறை‍வேற்றுவதில் விலங்குப்பிரிவு பொறுப்பு கூறுகின்றது.

‎தெகிவலை மிருககாட்சிசாலையில் விசேடமாக 350 வகைகளைச் சேர்ந்த ஏறத்தாழ 3500  விலங்குகள் கண்காட்சியில் வைக்கப்படுகின்றன. இவற்றுள் மிருகக்காட்சிச்சாலையில் சுதந்திரமாக வாழ்கின்ற பறவைகள் மற்றும் மீனினங்களும் அடங்குகின்றன.

கீழ் குறிப்பிட்டுள்ள வாறு விலங்குகள் பிரிக்கப்படுகின்றன.
வி‍சேடங்கள் விலங்குகளின் அளவு
பாலூட்டிகள் 100 450
பற‍வைகள்
110 1000-1500
ஊர்வன‍வைகள் 35 250
மீன்கள் 65 1000
நிலநீர் வாழ் உயிரினங்கள் 03 20
(முள்ளந்தண்டில்லா)விலங்குகள்-வண்ணத்துப்பூச்சிகள் 30 100
கடல் முள்ளந்தண்டில்லா (முதுகெலும்பில்லா) விலங்குகள் 10 25

‍மேற்படி தகவல்களின் படி உயிரின பல்வகைத்தன்‍மை அதிகளவில் காணக்கூடியதாக உள்ள விலங்குகளாவது பாலூட்டிகள் மற்றும் பறவைகளாகும். விலங்குப்பிரிவில் கண்காட்சியில் ‍வைக்கப்படும் விலங்குகளுக்கிடையில் இலங்‍கைச் சூழலுக்கு உரிய‍ வ‍கைகளும் இலங்‍கைச் சூழலுக்கு உரித்தற்ற ஆயினும் அழிந்துச் ‎செல்லும் எச்சரிக்கைக்குக்ளாகி இருக்கும் விலங்கின வ‍கைகளும் கருப்பு ரயினோசிரஸ (Black Rhinoceros) அரபியன் ஒரிக்ஸ் (Arabian Oryx) ‍ ‍போன்ற இனங்களும் கண்காட்சியல் ‍வைக்கப்படுகிறன. இலங்கையில் பூ‍னை இனத்‍தைச் ‍சேர்ந்த சிறிய பூ‍னை வகைகளான காட்டுப்பூனைஇ சிறுத்‍தைஇ ஹந்துன்திவியா (Wild cat,  Rusty spotted cat, Fishing cat) என்று அழைக்கப்படும்  விசேடங்களும் மிக உற்சாகத்துடனும்  கவனத்துடனும் கண்காட்சியில் ‍வைக்கப்படுகின்றன.

செய்தி பத்திரிக்கை

மாதாந்த வீடியோ

செய்திகள்